74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாற்றிய மோடி பல திட்டங்களை நிறைவேற்று வதாகவும், கொரோனா குறித்தும் பேசினார். அப்போது, சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் எனவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என தனது உரையை தொடங்கினார்.
நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. கொரோனாவிற்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி, கொரோனாவிற்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார். மேலும், கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
நமது 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பீம் செயலி மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, காஷ்மீரில் தொகுதி மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…