மகாராஷ்டிராவில் பரபரப்பு…கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து…7 பேர் பலி…!

Maharashtra Bhiwandi building

பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்தது பலியானோர்  எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டியில் கடந்த சனிக்கிழமையன்று  3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த கட்டிட விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றார்கள் பிறகு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கட்டிட உரிமையாளர் இந்திரபால் பாட்டீல் கைது செய்யப்பட்டு தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிவாண்டி டிசிபி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்