ஏர் கூலரை பயன்படுத்துவதற்காக கொரோனா நோயாளிக்கு வென்டிலேட்டரை கழற்றி விட்ட குடும்பத்தினர்.
கோட்டா மருத்துவமனையில், மகாராவ் பீம் சிங் என்பவர், கடந்த ஜூன் 13ம் தேதி கொரோனா பாதிப்பால் ஐ.சி.யு – வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு இல்லை என சோதனை முடிவுகள் வந்தது. மேலும் அங்கு இன்னொருவருக்கு ககொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு சோதனை முடிவுகள் பாசிடிவ் என வந்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக மகாராவ் பீம் சிங் ஐ.சி.யு – வில் இருந்து, தனிப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டார். அந்த வார்டு மிகவும் சூடாக இருந்ததால், அவரது குடும்பத்தினர் அன்றே ஒரு ஏர் கூலரை வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஏர் கூலரை சொருகுவதற்கு எந்த சாக்கெட்டும் கிடைக்காததால், அவருக்கு மாட்டப்பட்டிருந்த வெண்டிலெட்டரை அவிழ்த்து விட்டுள்ளனர். ஆனால், அந்த வெண்டிலேட்டர் மின்சாரம் இல்லாமலேயே அரைமணி நேரம் ஓடியுள்ளது. ஆனால், நோயாளி சற்று நேரத்தில் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து சனிக்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…