மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 21 நாளை எட்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து அதிகமான விவசாயிகள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பொருளாதார பாதிப்பு ஒவ்வொரு நாளும் 3,500 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கின்றன என்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.
போராட்டம் தாக்கம் குறித்து பேசிய அசோச்சாம், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரங்களுக்கு பெரும் அடியாகும். அசோச்சாம் தலைவர் நிரஞ்சன் ஹிரானந்தனி கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தால் சாலைகள், டோல் பிளாசாக்கள் மற்றும் ரயில்வே ஆகியவற்றை முற்றுகையிட்டதால், பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
போராட்டம் தாக்கம் குறித்து பேசுவதற்கு அசோச்சாம் மட்டும் ஒரு தொழிற்துறை அமைப்பு அல்ல, கடந்த 20 நாட்களில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5,000 கோடி ரூபாய் வர்த்தகம் மற்றும் பிற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கவனித்துள்ளது.
இது வரும் நாட்களில் பொருளாதாரத்தை பாதிக்கும், மேலும், கொரோனா காரணமாக பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இது தடையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…