அச்சமற்ற தலைவர்..! ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு காங்கிரஸ் வாழ்த்து..!

RahulGandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் ராகுல் காந்தி மிகவும் தைரியமான மற்றும் அச்சமற்ற தலைவர், இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மன்னிக்கவும், நம்பவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்திக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான உங்கள் தளராத அர்ப்பணிப்பும், துன்பங்களை எதிர்கொள்ளும் உங்கள் அடங்காத தைரியமும் போற்றத்தக்கது. கருணை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைப் பரப்பும் அதே வேளையில், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையைப் பேசுவதைத் தொடரவும், கோடிக்கணக்கான இந்தியர்களின் குரலாகவும் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்