மு.க.முத்துவின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி.!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.முத்துவின் உடலைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார்.

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். மு.க.முத்துவின் மறைவால் கோபாலபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.முத்துவின் உடலைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பெரியப்பாவின் மறைவால் சோகத்திலிருந்த அவருக்கு உறவினர்கள், திமுக நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். மு.க.முத்துவின் உடல் இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட்நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.