சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு, மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். காலையில், மு.க.முத்து மறைந்த செய்தியறிந்து மதுரையிலிருந்து விரைந்து வந்த மு.க.அழகிரி, தனது அண்ணன் உடலைக் கண்டதும் துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார். […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். மு.க.முத்துவின் மறைவால் கோபாலபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.முத்துவின் உடலைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள […]