பிப். 1 முதல் மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் – ஐ.எம்.ஏ

Default Image

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பான் இந்தியா ரிலே உண்ணாவிரதத்தை (IMA) இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய மருத்துவ கவுன்சில் (சி.சி.ஐ.எம்) வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

குறுகிய கால பயிற்சி எடுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது ஆபத்து என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.”Save Healthcare India Movement” தொடங்க இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) நாடு முழுவதும் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உடனடி உத்தரவுகளை அளித்து வருவதாக மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எம்.ஏ நாடு முழுவதும் ஒரு பெரிய விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தும். ஏனெனில் இது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பிப். 1 முதல் 24×7 உண்ணாவிரதத்தில் அமர மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். நாடு முழுவதும் இந்த விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.எம்.ஏ சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வெளியிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்