கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் FIR பதிவு.!

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதுடைய கர்ப்பிணி யானையை அங்குள்ள மக்கள் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து சாப்பிட கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டதால் அந்த ஒரு மாத கர்ப்பிணி யானை இறந்த விட்டது. வாயில்லா ஜீவனை கொன்றதற்காக பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கை மன்னார்காட் வனப்பிரிவு FIR பதிவு செய்துள்ளது. மேலும் இந்த கொடுஞ்செயலுக்கு யார் யார் காரணம் என்றும் , என்ன நடந்தது என்று விசாரித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025