#BREAKING :இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் ! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு வைரஸ் தாக்கம்

Published by
Venu

கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனா உருக்குலைந்து வரும் நிலையில்,அதை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில்  சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது புதியதாக  “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான்  நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு  கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சீனாவில் உள்ள உகான் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவிக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவியின்  உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

3 minutes ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

43 minutes ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

13 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

14 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

15 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

15 hours ago