#Budget2021 : கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,கொரோனா தடுப்பு ஊசி போட படுவதற்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ.35,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.