முன்னாள் ஏ.எம்.யூ மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக்கொலை

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று ( வியாழக்கிழமை ) இளம் விளையாட்டு வீரர் ( 20 வயது ) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட சனு அப்பாஸ் AMU வின் முன்னாள் மாணவராவார் .அவர் தனது சக நண்பர்களுடன் பயிற்சிக்காக மைதானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .இதுகுறித்து தகவலிருந்து வந்த AMU பாதுகாப்பு படையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
சனு அப்பாஸ் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட போது உடன் இருந்த நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025