முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு சம்மன்..!

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2 உதவியாளர்கள் கைதான நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது ரூ.100 கோடி மாமூல் வசூலித்த தர வேண்டும் என மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, அனில் தேஷ்முக் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அனில் தேஷ்முக் விலகினார். அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையினா் நாகபுரியில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகள், பங்களாக்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025