#SHOCKING:மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் – வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

மகாராஷ்டிரா:ஒரு மானிட்டர் பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோதனே கிராமத்திற்கு அருகில் உள்ள சஹிதாரி புலிகள் காப்பகத்தில் வங்காள மானிட்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேரை மகாராஷ்டிர வனத்துறை கைது செய்துள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நான்கு பேர் ஆயுதம் ஏந்தியபடி காட்டில் சுற்றித் திரிந்ததையடுத்து,முதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து,அவரது மொபைல் போனை சோதனை செய்ததில்,அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் கிளிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து,இச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும்,இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க இந்திய தண்டனை நீதிமன்றத்தில் குறித்து வனத்துறை அதிகாரிகள்வழக்கு தொடரவுள்ளனர்.அதன்பின்னர்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வங்காளம் மானிட்டர் பல்லி பாதுகாக்கப்பட்ட இனமாகும். எனவே, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,நான்கு பேருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025