அதிகரிக்கும் கொரோனா.. மஹாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 47,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மஹாராஷ்டிராவில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அம்மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதன்படி, பொதுமுடக்கத்தின் பொது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் வீடுகளில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025