இந்த தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடரபாக விசாரணை நடத்தி வருகிறது. பார்சலை வாங்க வரும்போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமாரை அதிரடியாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், ரமேஷ் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சுங்கத்துறை இதுவரை 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…