தங்கக் கடத்தல் வழக்கு.. கே.டி.ஜலீலிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பாஜகவினர் போராட்டம்.!

Published by
murugan

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உடன்  பலமுறை  தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

இதனால், ஜலீலை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில்,  ஊடக நிருபர்களைத் தவிர்ப்பதற்காக ஜலீல்  இன்று கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவகத்தில் விசாரணைக்காக காலை 6 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் என்ஐஏ அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம்  2 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜலீல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்றும்  என்ஐஏ அலுவலகத்திற்கு முன் ஜலீல் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டி அடித்தனர்.

தங்க கடத்தல் வழக்கு தொடர்பான என்ஐஏ விசாரணையின் போது, ​​ஸ்வப்னா சுரேஷ் பல முறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்வப்னாவுடன் தொடர்பு இல்லை என்று அமைச்சர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

9 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

46 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago