இலங்கைக்கு புதிய இந்திய தூதர் நியமிப்பு..!

- இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்
- இந்நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனால் இலங்கைத் தூதர் பத காலியான நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபால் பாக்லே 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரியாக இந்திய அரசு நியமித்தது. இப்பொழுது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ,பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர்,வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகார பிரிவையும் கையாண்டு பல முக்கிய பதவிகளை பாக்லே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025