ஜம்மு காஷ்மீரில் 2 பேர் சுட்டு கொலை – பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் உள்ள வான்பூராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜம்மு-காஷ்மீரின் காவல்துறை ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகம் ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இருவருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் ஆயுதங்கள் ஆகியவை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளதோடு, வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பது குறித்த விசாரணையும் தேடுதல் வேட்டையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025