ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அலையில் சிக்கி தவித்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு கடைபிடித்து வந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியவுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
ஹரியானா அரசு செப்டம்பர் 20 முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் திறக்கவுள்ளது. இதன் வகுப்புகள் கண்டிப்பாக கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் முதலில் ஜூலை 16 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 23 அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இப்போது 1 முதல் 3 வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 20 அன்று திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், பெற்றோரிடமிருந்து முன் அனுமதி கடிதம் பெற்று வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் வெப்பப்பரிசோதனை செய்யப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் இருக்கும் மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…