ஹரியானா வன்முறை.. 4 பேர் உயிரிழப்பு.! தனி மனிதன் தான் காரணம்.! அமைச்சர் குற்றசாட்டு.!

நேற்று ஹரியானா மாநிலத்தில் நுஹ் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தாகவும், அதனை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற சமயத்தில் 2 ஊர்காவல்படை காவலர்கள் உயிரிழந்தனர். மொத்தமாக 4 பேர் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நுஹ், சோஹ்னா, பட்டோடி மற்றும் மனேசர் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், ஹரியானாவில் அமைதியை சீர்குலைக்க விரும்பிய யாரோ ஒருவர் நூவில் வன்முறையை தூண்டியுள்ளார் என குற்றம் சாட்டினார். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஹரியானா மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜுடன் இன்று மதியம் நூஹ்வின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஹரியானா தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்காடுகிறது.