ஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை! மும்தாஜ் கல்லறை சேதம்!

மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது.
நேற்றிரவு, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் மழையில் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, தாஜ்மகாலில் இடி தாக்கிய நிலையில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும், தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் சேதமடைந்துவிட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025