மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் இன்று காலை 6:45 மணியளவில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

Helicopter Crash

புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது.

ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் மீட்புப் பணியில் நடைபெறுகிறது.

 

இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடும்  பனிமூட்டம் காரணமாக விபத்துக்கு நடந்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அதில் VT EVV என்ற பதிவு எண் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan
Indian Squad for NZ
Thoothukudi Perumal Temple