இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் உத்திரப்பிரதேசத்த்தில் 18 -க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்த்தில் உள்ள கான்பூரின் பாகர்கஞ் பகுதியை சேர்ந்தவர் ஷுனத் ஆவார்.இவருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.திருமணம் நடக்க இருந்த நாளன்று அப்பகுதியில் குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் பதட்டமான சூழலே நிலவி வந்தது.இந்நிலையில் ஷுனத்தின் குடும்ப பாரம்பரிய படி மாப்பிளை ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு வருவது வழக்கம்.ஆனால் கலவரம் நடைபெறும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் எப்படி ஊர்வலமாக வரமுடியும் என்று பலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக அப்பகுதியில் நிறைய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்துள்னர்.
இந்த சூழ்நிலையை அறிந்த ஷுனத்தின் உறவினர் பக்கத்து வீட்டு நபரான விமல் ,சபாடியா என்பவர்கள் உதவி செய்ய முடிவெடுத்துள்ளனர்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷுனத்தை தனது சகோதரியாக ,விமல் கருதி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தங்கையின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் எனக்கூறி விமல், அவரின் நண்பர்களான சோம்நாத் திவாரி ,நீராஜ் திவாரி ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். அவர்களும் உதவி செய்ய முடிவெடுத்து நண்பர்களை வரவழைத்துள்ளனர்.
அப்போது சுமார் 50 பேர் திரண்டுள்ளனர்.பின்னர் மணமகன் ஊர்வலம் நடக்க இருந்த இடத்திற்கு சென்ற அவர்கள் ,மணமகன் வரும் வழியே மனித சங்கிலி போன்று கைகளை இணைத்து பாதுகாப்பு கொடுத்ததோடு மண்டபம் வரை அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்லாமியரின் திருமணத்தில் மணமகனின் பாதுகாப்பிற்கு 50-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கைகோர்த்து நின்றதை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…