வேறு மாநில தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டட வேலை, தினக்கூலி போன்ற அமைப்பு சாரா தொழில்களை செய்துவந்தோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பலர் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், பலர் 1000 கிமீ என்றாலும் பரவாயில்லை என நடந்தே செல்ல திட்டமிட்டு தங்களது நடை பயணத்தை மேற்கொண்டு விட்டனர்.
இதனை அடுத்து, இன்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வந்தவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.