குழந்தைகளை வளர்க்கும்போது பெற்றோர்கள் எப்படி இருக்கவேண்டும் ..!இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள் ..!

Published by
murugan

ஒரு வருடத்தில் எத்தனை தினங்கள் வந்தாலும் நாம் மனதில் நவம்பர் மாதம் என்றால் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.எதிர்காலத்தில்  இந்த உலகை ஆளப்போகிறவர்கள்  குழந்தைகள்தான் என பெரியவர்கள் கூறுவதால் குழந்தைகளை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
Image result for நேரு குழந்தைகள்
நேரு 1889 நவம்பர் 14-ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள், இளைஞர்களின் கல்வி, முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றினார்.நேரு பணியின் இடையில் குழந்தைகளுடன் பேசுவது வழக்கமாக கொண்டு இருந்தார்.
குழந்தைகள் மீது நேருவிற்கும் நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு இருந்ததால் தான் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.குழந்தைகள் தினம் அன்று பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை , ஓவிய போட்டி என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
தற்போது  இந்தியாவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல் அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற வேண்டும் என்பதே  இந்த குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்போது குழந்தைகளோடு குழந்தைகளாக  மாறினால் மட்டும்தான் அவர்களை நாளைய வெற்றியாளராக வருவார்கள். குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொள்ளும் சின்ன சின்ன விஷயங்கள்தான்அவர்களின்  எதிர்காலத்தில் பிரதிபலிக்கும். பெற்றோர்கள் குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாக ஒரு கனவு இருக்கும். பெற்றோர் அதை தெரிந்துகொண்டு நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.தினச்சுவடு சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

Published by
murugan

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago