காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 படத்தால் ஈர்க்கப்பட்டு, ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய இந்திய திரைப்படம் ஆகிய தூம் 2 எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள கிருத்திக் ரோஷன் திருடன் மற்றும் மாறுவேட கொள்ளைகளில் ஈடுபட்டு ஹீரோவாக நடித்து இருப்பார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த காசியாபாத்தை சேர்ந்த ரகு கோஸ்லா என்பவர் அவரைப்போலவே தற்பொழுது ரயில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவர் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச கான்ஸ்டபிள் 30 வயது ஸ்ரீகாந்த் என்பவரும் துப்பாக்கி முனையில் இவருடன் சேர்ந்து பல கார்களை கொள்ளையடித்துள்ளது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மையில் கூட ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஐந்தரை மணியளவில் ஹூண்டாய் க்ரெட்டாவில் அமர்ந்து இருந்த ஒருவரது மொபைல் போன், கார் மற்றும் பணம் ஆகியவற்றை மூன்று நபர்கள் சேர்ந்து கொள்ளை அடித்துள்ளனர்.
அதன் பிறகு பதிவு பாதிக்கப்பட்டவர் செய்த வழக்கை விசாரித்த போது ரகு மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும்தான் இந்த வேலையை செய்வதாகவும் முதலில் ஸ்ரீகாந்த் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி ஒளித்து வைத்துவிட்டு போலீஸ் ஸ்ரீகாந்த் தன்னுடைய போலீஸ் சீருடை அணிந்து கொண்டு பாதுகாப்பான மறைவிடத்தை கோஸ்லா அடைவதற்கு உதவியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தூம் 2 எனும் ஹிருத்திக் ரோஷனின் படத்திலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் எவ்வாறு தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பாரோ அதுபோல கோஸ்லேவும் தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே கொள்ளை அடிக்கும் பழக்கம் உடையவராக வலம் வந்துள்ளார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…