நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். பின்னர் ராகுல் காந்தியின் இந்த செயல் பல தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி (Hug day) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு காங்கிரஸ் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தின வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில், கட்டிப் பிடி தினத்தன்று பா.ஜ.கவுக்கு நாங்கள் ஒரு மெசஜ் வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர். மேலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் கோழை என்றும், அன்பை வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற காந்தியின் விளக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது, வெறுப்பை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…