ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர்.
அந்த வடு ஆறுவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் ஒரு 18 வயது இளம்பெண்ணும் அந்த பெண்ணின் 10 வயது தங்கையும் தங்கள் பாட்டி வீட்டிற்கு செல்ல வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஹைதராபாத்தில் வழி தெரியவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அன்வர் மற்றும் பெரோஸ் ஆகியோர் அந்த இளம் பெண்ணையும் அவரது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஒரு லாட்ஜிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தங்கை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையில் அந்த இளம் பெண்ணையும் 10 வயது சிறுமியையும் காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் தனது தங்கையுடன் தப்பித்து சென்று பெற்றோர்களுக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறி பெற்றோரிடம் சென்றுள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள் அன்வர், பெரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…