காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி 6 -வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது .ஆனால் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 13 பேருடன் காணாமல் போன ஏ.என்-32 ரக விமானம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் விமானம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 0378-3222164, 9436499477, 9402132477, 9402077267 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…