ரூ .2.6 கோடி நிலுவைத் தொகையையும், மாதாந்திர ஜீவனாம்சம் ரூ .1.75 லட்சத்தை பிரிந்த மனைவியிடம் வழங்கவில்லை என்றால் சிறை என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு ரூ. 2.6 கோடி ஜீவனாம்சத்துடன், மாதந்திர ஜீவனாம்சம் ரூ.1.75 லட்சம் வழங்க வேண்டும் என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜீவனாம்சம் வழங்கப்படவில்லை அந்த பெண் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அந்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மறுஆய்வு மனுவை தீர்மானிக்கும் போது நிலுவைத் தொகை மற்றும் மாதாந்திர ஜீவனாம்சம் தொகையை செலுத்துமாறு கணவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அவர் அந்தத் தொகையை செலுத்தவில்லை என கூறினார்.
இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி. ராமசுப்பிரமணியன் கூறுகையில், கணவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து தப்ப முடியாது, ஜீவனாம்சம் வழங்குவது அவரது கடமையாகும் என்று கூறினார்.
நான்கு வார காலத்திற்குள், மாதந்தோறும் வழங்க வேண்டிய ஜீவனாம்ச தொகையையும், நிலுவையில் உள்ள மொத்தத் தொகையையும் தவறாமல் தனது மனைவியிடம் செலுத்தவேண்டும். தவறினால் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியிருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான கணவர், தொலைத் தொடர்புத் துறையில் தேசிய பாதுகாப்புத் திட்டத்தில் பணி செய்து வருகிறேன். தன்னிடம் பணம் இல்லை என்றும், அந்தத் தொகையை செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என கேட்டார். அதற்கு நீதிபதிகள் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றத் தவறினால் விளைவு மோசமாக இருக்கும். இது போன்ற வழக்கில் உள்ள உங்களுக்கு தேசிய பாதுகாப்புத் திட்டத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தனர்.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…