கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை வீட்டில் வைத்தே உறுதி செய்யக்கூடிய ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், மக்கள் நாளுக்குநாள் கொரோனாவால் தொடர்ந்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதை சோதிக்க மருத்துவமனைகளுக்கு சென்று மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒரே நேரத்தில் பரிசோதனைகள் செய்வது சிரமமாக உள்ளது. இதனை அடுத்து தற்போது புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் நிறுவனம் வீட்டில் வைத்தே கொரோனாவை கண்டறியக்கூடிய ரேபிட் ஆன்டிஜன் கருவியை உருவாகியுள்ளது. இந்த கருவி 15 நிமிடங்களில் கொரோனா உள்ளதா இல்லையா என்பது குறித்த முடிவுகளை தெரிந்து கொள்ள உதவுவதுடன் இதன் விலையும் 250 ரூபாய் மட்டும் தானம்.
இந்த கருவி கண்டறியப்பட்டு இருந்தாலும் இதற்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்பொழுது வீட்டில் வைத்து மூக்கில் உள்ள சளி மாதிரி எடுத்து இந்த கருவியில் வைத்து கொரோனா உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கழகம் புதன்கிழமை முதல் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள IMCR இந்த கருவியின் பரிசோதனையை கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது எனவும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் இக்கருவியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்று கருதப்படும் எனவும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை எனவும், அவர்கள் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படக்கூடிய ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…