I.N.D.I.A : இந்தியா கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவுடன் நாளை முக்கிய ஆலோசனை.!

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி தான் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டமானது ஐக்கிய ஜனதா தளம் அழைப்பின் பெயரில் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது
அதன் பிறகு இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. அதனை தொடந்து இம்மாதம், இந்த ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.
மும்பையில் இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இந்தியா கூட்டணி தலைவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவருவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025