கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்த ஒத்திகை இன்று நடைபெற உள்ளது.
ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டது.அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மற்றொரு ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகிக்கும் திறன் மற்றும் மேலாண்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை போல், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஊரக அல்லது நகர்ப்புற இடங்கள் என மூன்றுவிதமான இடங்கள் அடையாளம் காணப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி ஒத்திகை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…