இந்தியாவிற்கு கூடுதலாக ரூ. 22,53,22,650 நிதியுதவி அறிவித்த அமெரிக்கா .!

அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 33050 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ம் தேதி (2.9 மில்லியன் டாலர்)இந்திய மதிப்பில் ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதனால் , அமெரிக்கா மூலம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025