இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,897 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,827 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,13,413 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 54 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,181 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 3,230 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,70,165 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,90,83,96,788 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 14,85,292 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…