கடந்த 9 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புக்காக ரூ.34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது..! பிரதமர் மோடி

PMModi

கடந்த 9 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புக்காக ரூ.34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அதில் ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 முத்திரையையும் அவர் வெளியிட்டார். பிறகு உரையாற்றிய பிரதமர், தேசத்தின் புதிய உற்சாகத்தையும் மனநிலையையும் குறிக்கும் வகையில் கவிதை மூலம் தனது உரையைத் தொடங்கினார்.

இதனையடுத்து, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கிட்டத்தட்ட சுமார் ரூ.34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய ஏழு தசாப்தங்களில் வெறும் 20 ஆயிரம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. இன்று மாதந்தோறும் 6 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்