கல்கி ஆசிரமத்தில் 4-ஆவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை ..!

இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் ஒன்றான கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் கடந்த மூன்று நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று நான்காவது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றைய சோதனையில் 93 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேலும் ரூ.28 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்கமும் ,ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025