இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை கொடுக்கப் பட்டு உள்ளது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
இந்த ஆதார் அட்டை வங்கிக்கணக்கு தொடங்குவது முதல் எல்லா அரசு திட்டங்களுக்கும் , மானியங்களை பெறுவதற்கும் ஆதார ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுகிறது.
இந்த ஆதார் எண்ணை வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறுகிறது.
மேலும் உச்சநீதிமன்றம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் எண் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனால் போலியான பான்எண்கள் ஒழிக்கப்பட்டன.
இந்த இணைப்புக்காக பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கெடு தேதி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளனர்.இதை தொடர்ந்து வருமான வரித்துறை ஒரு தகவலை வெளியிட்டது.அதில் , ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என கூறியுள்ளது.
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…
பாங்காக் : தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…