இந்தியாவில் அதிகரித்து வரும் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை…! வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்…!

இந்தியாவில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து மாநில மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை நாடு முழுவதும், 32,36,63,297 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தியாவில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற நமது இலக்கு தொடர வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
India’s vaccination drive keeps gaining momentum!
Congrats to all those who are driving this effort.
Our commitment remains vaccines for all, free for all.
सबको वैक्सीन, मुफ्त वैक्सीन। https://t.co/VK15ZPHMUm
— Narendra Modi (@narendramodi) June 28, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025