இந்தியாவில் 1983-க்கு பிறகு முதன்முறையாக அதிகப்படியான மழை பதிவு!

இந்தியாவில் 1983-க்கு பிறகு முதன்முறையாக அதிகப்படியான மழை பதிவு.
இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மூன்று வாரங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.
இந்த ஆகஸ்டில் 1983 க்குப் பிறகு முதல் முறையாக 24% அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 13% அதிகமாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 42% அதிகமாகவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41% அதிக மழையும் காணப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறுகையில், செப்டம்பர் 3 வரை சராசரியாக மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 10 வரை வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்பதால் மழைப்பொழிவு குறையும் என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025