இந்தியாவின் மிக ஆபத்தான சூப்பர்சோனிக் ‘பிரம்மோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி.!

இந்தியா இன்று சூப்பர்சோனிக் ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை 400 கி.மீ தூரத்தில் இலக்குகளை துல்லியமாக குறிவைக்கும் திறன் கொண்டது. ‘பிரம்மோஸ்’ இந்தியாவின் மிக ஆபத்தான ஏவுகணை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை, இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ளது.
இதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது சூப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாவது சோதனை ஆகும்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதலில் 290 கிலோமீட்டர் இலக்காக இருந்தது. அதன் பின், இலக்கை 400 கிலோமீட்டருக்கு மேல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மார்ச்- 2017 இல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025