சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் 304 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கொரோனா வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது,சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…