பிரிட்டனில் போர் விமான பயிற்சியில் இந்தியா பங்கேற்காது – ஐ.ஏ.எப்

பிரிட்டனில் நடைபெற உள்ள போர் விமான பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என இந்திய விமானப்படை அறிவிப்பு.
‘எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற பெயரில் இங்கிலாந்தின் வாடிங்டனில் மார்ச் 6 முதல் 27 வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேறக்காது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் இலகு ரக போர் விமானமான (LCA) தேஜஸ், இங்கிலாந்து மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப்படைகளின் போர் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க இருந்த நிலையில், பங்கேற்காது என கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரால் வாடிங்டனில் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் ஐ.ஏ.எப் தெரிவித்துள்ளது. 5 தேஜாஸ் விமானங்கள் கலந்து கொள்ளவிருந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போரால் கலந்துகொள்ளவில்லை என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது.
எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற போர் பயிற்சி செயல்திறனை வெளிப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் விமானப்படைகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், போர்த்திறனை அதிகரிக்கவும், நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தப் போர்ப்பயிற்சி நடத்தப்படுகிறது. இலகுரக போர் விமானமான தேஜஸ் அதன் செயல்பாட்டுத்திறன், மற்றும் போர்த்தந்திரத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.