இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
  • மேலும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவர் இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ககன்யான் திட்டத்தை குறித்து பேசிய அவர், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள் என்றும், பின்னர் 1984-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.

இந்நிலையில், தற்போது இந்திய வீரர்கள், இந்தியாவிலிருந்து இந்திய விண்கலத்தில் செல்ல இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சந்திரயான்-2 நிலவில் தறையிரங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து சந்திரயான்-3 மூலம் அதனை நிலவில் தரையிறக்கி சாத்தியமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

46 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago