இந்தியாவில் ஆக்ஸ்போர்டு போன்ற பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, இந்திய பல்கலைகளில் பயின்றவர்கள் மைக்ரோ சாப்ஃட், கூகுள்,ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டுப் பல்கலைகளின் கிளைகள் இந்தியாவில் துவங்கப்பட்டால் மேலும் திறமைமிக்கவர்களை உருவாக்க முடியும்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கச் செல்கின்றனர். இதனால் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இருப்பினும் வாஷிங்டன் பல்கலை, லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல்கலைகள் இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், எம்சிகில் பல்கலை, சிட்னி பல்கலை போன்றவை இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கருத்து தற்போது தெரிவித்துள்ளனர்.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…