நாளை முதலமைச்சராக பதவியேற்பு-ஏற்பாடுகள் தீவிரம்

Published by
கெளதம்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
  • ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக  ஹேமந்த் சோரன் நாளை  பதவி ஏற்க உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ,அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள்  தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

இதனால் ஆளுநர் திரவுபதி முர்முர்வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்  ஹேமந்த் சோரன். இதனையடுத்து  ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதமைச்சராக  நாளை (டிசம்பர் 29-ஆம் தேதி )ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழா ராஞ்சி மோஹராபடி மைதானத்தில் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரியங்கா,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

47 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

57 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago