பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!
பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில் இன்று நடைபெற விருக்கும் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொள்கிறது.
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி. இந்த நிலையில், மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இருப்பினும், மழை அதிகமாக இல்லை, விரைவில் டாஸ் எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக டாஸ் போட நேரமானதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் வென்றால், முதல் அணியாக பஞ்சாப் அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். தொடக்கத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்ற டெல்லி அணி கடைசி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த தீவிரமாக முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லும்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.