ஜூன் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை..!

கொரோனா காரணமாக ஜூன் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சில விமானங்கள் மட்டும் மத்திய அரசின் அனுமதியுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025