உளவுத்துறையினர் எனும் பெயரில் சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டினர் என்று திமுக எம்.பி. கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்.
இந்நிலையில் தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாகவும் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மக்களவையில் அவர் பேசுகையில், உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் என்னை இன்று சந்தித்தனர்.மக்களவையில் இன்று நான் என்ன பிரச்சினை பற்றி பேசப்போகிறேன் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்கள் என்று பேசினார்.இதற்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…